பிரண்டை துவையல்
இந்த துவையலை அடிக்கடி சாப்பிட்டால் மூட்டு பிரச்சனையை சரி செய்யலாம் .
இந்த துவையலை அடிக்கடி சாப்பிட்டால் மூட்டு பிரச்சனையை சரி செய்யலாம் .
தேவையான பொருட்கள் :
பிரண்டை - 1 cup
கருப்பு உளுந்து - 1 Table spoon
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 5 பல்லு
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை:
பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் . அதிலுள்ள நாரினை எடுத்து விடவும் . முற்றிய பிரண்டையை பயன்படுத்த வேண்டாம் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு உளுந்து , காய்ந்த மிளகாய் , பூண்டு , பிரண்டை போன்றவற்றை வதக்கவும். பின் ஆறவைத்து அதனுடன் புளி சேர்த்து அரைக்கவும் . வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்தவற்றை போடவும் .
இதனை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் .
Comments
Post a Comment