முருங்கை கீரை சூப்: சில பேர் கீரை வகைகளை சாப்பிட ரொம்பவே கஷ்டபடுவாங்க. அதிலும் குழந்தைகள் விரும்பமாட்டாங்க. இந்த மாதிரி சூப் செய்து கொடுக்கும் போது வித்தியாசமாகவும் , சாப்பிட வைக்கவும் முடியும். தேவையான பொருட்கள்: [ இரண்டு பேர் சாப்பிட] முருங்கை கீரை - 1 கப் வெங்காயம் - 1 சிறியது பூண்டு - 5 பல்லு இஞ்சி - சிறிய துண்டு உப்பு , எண்ணெய் - தேவையான அளவு மிளகு தூள் - 1/2 ஸ்பூன் சோள மாவு - 1 ஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு எலுமிச்சை சாறு - 5 சொட்டு செய்முறை: ஒரு பாத்திரத்தில் முருங்கை கீரையை தண்ணீர் விட்டு வேகவிடவும். அந்த தண்ணீரை வடிகட்டி வைக்கவும். பின்பு எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, முருங்கை கீரை சேர்த்து வதக்கவும். வடிகட்டிய முருங்கை கீரை தண்ணீரை அதில் சேர்க்கவும். கொதி வந்தவுடன் சோள மாவு, உப்பு சேர்த்து 5 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து க