Skip to main content

Posts

Showing posts from July, 2017

மசாலா சுண்டல்

மசாலா சுண்டல் தேவையான பொருட்கள்: வேகவைத்த சுண்டல்      -  2 cup (வெள்ளை பட்டாணி (அ) வெள்ளை கொண்டைகடலை) வெங்காயம்.                         -  2 தக்காளி                                  -  2 சீரகம்                                       -  1 spoon துருவிய தேங்காய்            -  1  cup மஞ்சள் தூள்                         -  1/2 spoon உப்பு                                         - தேவையான அளவு கறிவேப்பிலை கொத்தமல்லி செய்முறை :                  வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றவும் . பின்பு கடுகு போடவும். தாளித்த பின் சீரகம் , வெங்காயம் , தக்காளி  போட்டு வதக்கவும் . வதக்கிய பின் கடலையை போடவும் .  தேவையான அளவு உப்பு , மஞ்சள்தூள் சேர்க்கவும். துருவிய தேங்காயை அரைத்து அதில் போடவும் . தண்ணீர் விடக்கூடாது. கறிவேப்பிலை , கொத்தமல்லி சேர்த்து கிளறவும். Published

கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி சாதம் தேவையான பொருட்கள்: அரிசி                            - 1   ¼ kg கொத்தமல்லி          - 2  cup இஞ்சி                           - 1 துண்டு பச்சை மிளகாய்     - 3 பூண்டு                         - 4  பல்லு தேங்காய்                   - சிறிது பட்டை                         - 1 கிராம்பு                       - 2 ஏலக்காய்                   - 2 வெங்காயம்              - 2 உப்பு, எண்ணெய்  -  தேவையான அளவு செய்முறை முதலில்  கொத்தமல்லி , இஞ்சி ,பூண்டு, பச்சை மிளகாய் , தேங்காய்  இவற்றை நன்றாக அரைத்து வைக்கவும். அரிசியை வேக வைத்து வடித்து வைக்கவும் . ஒரு வாணலில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு, ஏலக்காய் , வெங்காயம் போன்றவற்றை நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்தவற்றையும் சேர்த்து வதக்கவும். கடைசியில் சாதம், உப்பு  போட்டு நன்றாக கிளறவும் . Published

நூடுல்ஸ் தோசை

நூடுல்ஸ் தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு நூடுல்ஸ் வெங்காயம்                 - 1 (பெரியது) தக்காளி                         - 1 (பெரியது) கார மிளகாய் தூள்   - 1 spoon உப்பு                                - தேவையான அளவு எண்ணெய்                   - 4 spoon செய்முறை :   ஒரு வாணலில்  எண்ணெய் விட்டு , வெங்காயம், தக்காளி இரண்டையும் நன்றாக வதக்கவும் . பின்பு நூடுல்ஸ் சேர்த்து, தண்ணீர் ஊற்றவும். சிறிது உப்பு, கார மிளகாய் தூள்  சேரத்து நன்றாக கிளறவும் . சிறிது நேரம் கழித்து gas off செய்யவும். தோசை கல்லில் தோசையை ஊற்றவும். அதன் மீது இந்த நூடுல்ஸ் கிரேவியை  தடவவும். Published

கத்திரிக்காய் தொக்கு

கத்திரிக்காய் தொக்கு தேவையான பொருட்கள்: கத்தரிக்காய்              -  1/4kg வெங்காயம்                -  1 தக்காளி                        -  1   பூண்டு                           -  10 பல்லு இஞ்சி                             -  1 துண்டு மஞ்சள் தூள்               -  1/4 spoon மிளகாய் தூள்            -  1 ½  spoon உப்பு                               -  தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் கடுகு கறிவேப்பிலை செய்முறை :                         கத்திரிக்காயை பொடியாக அரிந்து கொள்ளவும். வெங்காயம் , தக்காளி  பொடியாக நறுக்கி கொள்ளவும் . இஞ்சி, பூண்டை அரைத்து வைக்கவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகை போடவும். பின்னர் வெங்காயம், தக்காளி, இஞ்சி , பூண்டை சேர்த்து வதக்கவும். கத்திரிக்காயை அதில் போடவும். நன்றாக வதங்கிய பின்  தண்ணீர் சேர்க்கவும் . மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள்  போன்றவற்றை போடவும்.கத்திரிக்காய் வெந்தவுடன் அடுப்பை அனைக்கவும்.

Mushroom பக்கோடா

Mushroom பக்கோடா தேவையான பொருட்கள் :    Mushroom                          -  2 cup கடலை மாவு                 - 1 spoon அரிசி மாவு                      - 1 spoon மைதா மாவு                   - 1 spoon காரமிளகாய் தூள்       - 1 spoon Corn flour                               - 1 spoon உப்பு                                    -  தேவையான அளவு எண்ணெய்                       -  பொரிப்பதற்கு ஏற்ப செய்முறை:                           Mushroomஐ சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் . அதனுடன்  கடலை மாவு, அரிசி மாவு, காரமிளகாய் தூள் ,  corn flour , மைதா மாவு, உப்பு அனைத்தையும்  சேர்த்து   தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும் . வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன்  பொரித்து எடுக்கவும் .

வேர்க்கடலை வறுவல்

வேர்க்கடலை வறுவல் தேவையான பொருட்கள் : வேர்க்கடலை                   - 1/4 kg எண்ணெய்                        - 2 spoon எலுமிச்சை சாறு             - 2 spoon உப்பு , காரமிளகாய்      - 1  சிட்டிகை மிளகு தூள்                          - 1 spoon செய்முறை :                         முதலில் வேர்க்கடலையை வறுக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு, காரமிளகாய் தூள் , மிளகு தூள் போன்றவற்றை போட்டு ஒன்றாக கலக்கவும் . அதில் வேர்க்கடலையை போடவும் . ஒரு frying pan ல் இதனை வறுக்கவும் .

முடக்கொத்தான் கீரை தோசை

முடக்கொத்தான் கீரை தோசை                                                                    இந்த கீரை உடலுக்கு மிகவும் நல்லது. மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சாப்பிடலாம். தேவையான பொருட்கள் : இட்லி மாவு                           -  1 cup முடக்கொத்தான் கீரை  - 1 cup சோம்பு                                   -   சிறிது பூண்டு                                    -   சிறிது காய்ந்த மிளகாய்              -   5 உப்பு                                         -  தேவையான அளவு செய்முறை :                                 முடக்கொத்தான் கீரையை நன்றாக அலசி வைக்கவும். மிக்சியில் கீரை, சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய்  போன்றவற்றை அரைக்கவும். அரைத்தவற்றை இட்லி மாவில் கலந்து , தேவையான அளவு உப்பு சேர்த்து , தோசை கல்லில்  வார்க்கவும் .

Bread cutlet

Bread cutlet தேவையான பொருட்கள் : Bread                                   -  5 piece உருளைக்கிழங்கு     - 1 பெரியது ( வேகவைத்தது) Sweet corn                          -  1 cup கரம் மசாலா               -  1 spoon Bread crums                        -  2 spoon மைதா மாவு                 -  2 spoon உப்பு, எண்ணெய் , கொத்தமல்லி தேவையான அளவு செய்முறை:                            Breadஐ தண்ணீர் தெளித்து உதிர்த்து கொள்ளவும். பின்னர் அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, sweet corn, கரம் மசாலா, உப்பு , கொத்தமல்லி போன்றவற்றை சேர்க்கவும். இந்த கலவையை வட்ட வடிவில் செய்து , இதன் மீது bread crums, மைதா மாவு தூவவும் . தோசைகல்லில் எண்ணெய் விட்டு வார்க்கவும்.

சௌ சௌ சட்னி

சௌ சௌ சட்னி                                        காய்கறிகள் சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம் . தேவையான பொருட்கள் சௌ சௌ                    - 1/4 kg வெங்காயம்                 - 1 தக்காளி                         - 1 காய்ந்த மிளகாய்      - 3 உளுத்தம்பருப்பு        - 2 spoon உப்பு , எண்ணெய்    -  தேவையான அளவு தாளிக்க எண்ணெய் கடுகு கறிவேப்பிலை செய்முறை                          ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம் , தக்காளி , சௌ சௌ, உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய் போன்றவற்றை நன்றாக வதக்கவும் . ஆற வைத்து மிக்சியில், உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும் .