Skip to main content

Posts

Showing posts from August, 2017

சுரைக்காய் பஜ்ஜி

சுரைக்காய் பஜ்ஜி தேவையான பொருட்கள் : சுரைக்காய்           - 1 பஜ்ஜி மாவு             - 2 cup எண்ணெய்            -  தேவையான அளவு செய்முறை :                            சுரைக்காயை மெல்லியதாக  peeler  பயன்படுத்தி சீவிக்கொள்ளவும். பின்னர் வட்டவடிவில் உருட்டி , பஜ்ஜி மா வில் போட்டு, வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் , சுரைக்காயை பொரித்து எடுக்கவும்.

இஞ்சி துவையல்

இஞ்சி துவையல் தேவையான பொருட்கள் : இஞ்சி                           - 1 cup கடலைப்பருப்பு      - 1 spoon உளுந்து பருப்பு       - 1 spoon கடுகு                            - ¼ spoon வெந்தயம்                  - ¼ spoon காய்ந்த மிளகாய்   -  3 புளி                                - ஒரு கோலி உருண்டை அளவு வெல்லம்                     - 1 spoon உப்பு ,எண்ணெய்  - தேவையான அளவு செய்முறை :                                இஞ்சியை தோல் சீவி , பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு , வெந்தயம் , கடுகு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை வறுக்கவும். இதனுடன் இஞ்சியை சேர்க்கவும். இதனுடன் புளி, வெல்லம் , உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து கொட்டவும்.

கத்தரிக்காய் முருங்கைகாய் பொரியல்

கத்தரிக்காய் முருங்கைகாய் பொரியல் தேவையான பொருட்கள் : கத்தரிக்காய்             - 4 முருங்கைகாய்         -1 வெங்காயம்               - 1 தக்காளி                       - 1 பூண்டு                          - 4 பல்லு தேங்காய்                    -  சிறிது இஞ்சி                            -  சிறிது மிளகு                            - 1 teaspoon சீரகம்                            - 1 teaspoon மஞ்சள் தூள்              - சிறிது கடுகு                             - 1 teaspoon உப்பு , எண்ணெய்  -  தேவையான அளவு செய்முறை :                              முதலில் கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும் . முருங்கைகாயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் . மிக்சியில் வெங்காயம் , தக்காளி , மிளகு, சீரகம், இஞ்சி , பூண்டு, தேங்காய் போன்றவற்றை அரைத்து கொள்ளவும் .வாணலில் சிறிது எண்ணெய் விட்டு , கடுகை தாளிக்கவும் . பின்னர் கத்தரிக்காய் , முருங்கைகாய் இரண்டையும் வதக்கவும் . வதங்கிய பின் மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும். பின்னர் அரைத்த கலவையை அதில் சேர்க்கவும் .சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். காய் வெந்தவ