Skip to main content

Posts

Showing posts from November, 2017

முள்ளங்கி முட்டை பொடிமாஸ்

முள்ளங்கி முட்டை பொடிமாஸ் தேவையான பொருட்கள்: முள்ளங்கி                        -  1/4 kg முட்டை                              -  2 வெங்காயம்                     -  1  பெரியது பச்சைமிளகாய்             -  2 உப்பு , எண்ணெய்        -  தேவையான அளவு கொத்தமல்லி                  - சிறிது செய்முறை:                          முள்ளங்கியை துருவி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம் , பச்சை மிளகாய் இரண்டையும் வதக்கவும். பின்னர் துருவிய முள்ளங்கியை அதில் போட்டு வதக்கவும். முள்ளங்கி வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கிளறவும். உப்பு சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லியை தூவவும்.

வெந்தயகீரை சாதம்

வெந்தயகீரை சாதம் தேவையான பொருட்கள்: அரிசி                                -   2 cup (வேகவைத்தது) வெந்தயகீரை              -    2 cup வெங்காயம்                  -  2 முந்திரி                            - 10 பச்சை மிளகாய்         -  3 உப்பு, நெய்                     - தேவையான அளவு செய்முறை :                           வாணலில் சிறிது நெய் விட்டு முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயகீரை போன்றவற்றை நன்றாக வதக்கவும் . பின்னர் சாதம், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் .

stupped பணியாரம் (அ) இட்லி

stupped பணியாரம் (அ) இட்லி                                                              இந்த வகையான இட்லி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் . தேவையான பொருட்கள் : இட்லி மாவு                       - 2 cup வெங்காயம்                    - 1 பெரியது தக்காளி                            - 1 உருளைக்கிழங்கு        -  2 (வேகவைத்தது ) கேரட்                                 - 1 பச்சை மிளகாய்           - 2 மஞ்சள் தூள்                   -  சிறிது உப்பு, எண்ணெய்        -  தேவையான அளவு செய்முறை :                                           ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி , பச்சை மிளகாய் , கேரட் போன்றவற்றை நன்றாக வதக்கவும் .பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து , உப்பு , மஞ்சள் தூள் போடவும் . இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி இட்லி மாவை சிறிது ஊற்றி, இந்த மசாலா கலவையை வைத்து , பின்னர் இட்லி மாவை ஊற்றவும்.  அல்லது பணியாரம் செய்யும் பாத்திரத்தில் இதே போல செய்யலாம் .

நூடுல்ஸ் omelette

நூடுல்ஸ் omelette தேவையான பொருட்கள்: முட்டை                         - 2 நூடுல்ஸ்                      - 1 pack வெங்காயம்               -  1 தக்காளி                       -   1 குடை மிளகாய்        -  1/2 மஞ்சள் தூள்              -  ¼ spoon உப்பு, எண்ணெய்   - தேவையான அளவு செய்முறை :                               ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், உப்பு, நூடுல்ஸ் மசாலா, வேகவைத்த நூடுல்ஸ் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். பின்னர் ஒரு தவா வில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் , தக்காளி, குடைமிளகாய் மூன்றையும் வதக்கவும் . அதனுடன் முட்டை கலவையை சேர்த்து omelette  போல ஊற்றவும்.

பிரண்டை துவையல்

பிரண்டை துவையல் இந்த துவையலை அடிக்கடி சாப்பிட்டால் மூட்டு பிரச்சனையை சரி செய்யலாம் . தேவையான பொருட்கள் : பிரண்டை                   - 1 cup கருப்பு உளுந்து       - 1 Table spoon காய்ந்த மிளகாய்   - 5 பூண்டு                         - 5  பல்லு புளி                                - சிறிது உப்பு                             - தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் கடுகு கறிவேப்பிலை செய்முறை: பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் . அதிலுள்ள நாரினை எடுத்து விடவும் . முற்றிய பிரண்டையை பயன்படுத்த வேண்டாம் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு உளுந்து , காய்ந்த மிளகாய் , பூண்டு , பிரண்டை போன்றவற்றை வதக்கவும். பின் ஆறவைத்து அதனுடன் புளி சேர்த்து அரைக்கவும் . வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்தவற்றை போடவும் . இதனை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் .

ஜவ்வரிசி பயத்தம் பருப்பு பாயாசம்

ஜவ்வரிசி பயத்தம் பருப்பு பாயாசம்                        ஒரு நாள் பக்கத்து வீட்ல வரலட்சுமி பூஜைக்கு கூப்பிட்டாங்க. என்னோட தோழிகளும், குழந்தைகளும் எல்லாரும் போயிட்டுவந்தோம். பூஜை முடிஞ்சதும்,  வடை, பாயாசம் , கேசரி எல்லாம் குடுத்தாங்க.  குழந்தைகளும் பிடிச்சதை சாப்பிட்டாங்க. நான் பாயாசம் சாப்பிட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சி.  என்ன பாயாசம்னு பாத்தா , ஜவ்வரிசி பயத்தம் பருப்பு பாயாசம் . பயத்தம் பருப்பு எப்பவுமே எனர்ஜிட்டிக்கான ஒரு பொருள் தான் . பயத்தம் பருப்புல ரசம் பண்ணாகூட ரொம்ப நல்லா இருக்கும், சுவையாவும் இருக்கும் .  நீங்களும் இந்த பாயாசத்தை செய்து பாருங்க . தேவையான பொருட்கள் : ஐவ்வரிசி                                    - 1 cup பயத்தம் பருப்பு                      - 1 cup வெல்லம் (அ)  சர்க்கரை     - 1 cup பால்                                              -1 cup முந்திரி                                        -  1 table spoon திராட்சை                                   - 1  table spoon ஏலக்காய் தூள்                        - சிறிது நெய்                                              -

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுகாய் தேவையான பொருட்கள் : தக்காளி                         -  ½ kg புளி கரைசல்               -  2 table spoon வெந்தயம்                     -  1 tea spoon கடுகு                               -  1 tea spoon பூண்டு                            -  10 பல்லு கார மிளகாய் தூள்   - 1 spoon உப்பு, எண்ணெய், கடுகு , கறிவேப்பிலை தேவையான அளவு செய்முறை:                                முதலில் தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் புளிக்கரைச்சலை அதில் ஊற்றவும் . சிறிது கெட்டியான உடன் மற்றொரு வாணலில் வெந்தயம், கடுகு இரண்டையும் வறுத்து பொடி பண்ணவும். இந்த பொடியை அதில் சேர்க்கவும். பின்னர் காரமிளகாய் தூள் ,உப்பு போன்றவற்றை சேர்க்கவும் . வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .

பீர்க்கங்காய் தோல் துவையல்

பீர்க்கங்காய் தோல் துவையல் தேவையான பொருட்கள் : பீர்க்கங்காய் தோல்             - 1 cup உளுந்து பருப்பு                      -  2 table spoon கடலை பருப்பு                        -  1 table spoon காய்ந்த மிளகாய்                  -  3 புளி                                               -  1  கோலி உருண்டை  அளவு உப்பு, எண்ணெய் , கடுகு  -  தேவையான அளவு செய்முறை :                           பீர்க்கங்காய் தோலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலில் எண்ணெய் விட்டு  , புளியை தவிர அனைத்து பொருட்களையும்  வறுக்கவும். மிக்சியில் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.  வாணலில் எண்ணெய் விட்டு கடுகை போட்டு தாளித்து அரைத்தவற்றை அதில் போட்டு வதக்கவும் .