Skip to main content

Posts

Showing posts from June, 2017

முட்டை பொடிமாஸ்

Egg  பொடிமாஸ் தேவையான பொருட்கள்:  முட்டை                       -  2 வெங்காயம்             -  2 தக்காளி                      - 2 இஞ்சி                            - சிறிது பச்சை மிளகாய்   - 4 பூண்டு                         - சிறிது மஞ்சள் தூள்            - சிறிது உப்பு                              - சிறிது செய்முறை:                               முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துகொள்ளவும்.  பின்பு மிக்சியில் வெங்காயம் , தக்காளி , பூண்டு , இஞ்சி , பச்சை மிளகாய் அனைத்தையும் நன்றாக அரைக்கவும். பின்னர் வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அரைத்தவற்றை அதில் போட்டு வதக்கவும். சிறிது  உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். அடித்த முட்டையை அதில் ஊற்றவும் . தீயை குறைந்த அளவு வைத்து, கிளறவும்.

சேனைக்கிழங்கு கட்லெட்

சேனைக்கிழங்கு கட்லெட் தேவையான பொருட்கள் : சேனைக்கிழங்கு   - 1/4 kg பச்சை பட்டாணி - 1 cup கேரட் - 1 cup பீன்ஸ் - 1 cup கொத்தமல்லி - சிறிது கரம் மசாலா - 1 spoon உப்பு - தேவையான அளவு Bread crums   -  தேவையான அளவு மைதா மாவு - 1 spoon செய்முறை : முதலில் சேனைக்கிழங்கை வேகவைத்து, மசித்து வைக்கவும். அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் , பச்சை பட்டாணி , கொத்தமல்லி , உப்பு, மைதா மாவு, கரம் மசாலா,  bread crums, மைதா மாவு  ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவையான வடிவம் ( shape) செய்து , bread crums ஐ அதன் மீது தூவி தோசை கல்லில் வார்க்கவும்.

அத்திகாய் கூட்டு

அத்திகாய் கூட்டு                                      இந்த அத்திகாயை குழந்தைகள் சாப்பிடமாட்டாங்க. சப்பாத்தி , தோசை மீது தடவி கொடுத்து சாப்பிட வைக்கலாம் . மிகவும் ஆரோக்கியமானது. தேவையான பொருட்கள் : அத்தி காய்                    - 1 cup பாசி பருப்பு                   -  1/2cup(தோல் உள்ளது) தக்காளி                          -  2 வெங்காயம்                  - 2 பூண்டு                             - சிறிது இஞ்சி                               - சிறிது காரமிளகாய் தூள்     - 1/4 spoon தனியா தூள்                 - 1/4 spoon கரம் மசாலா                 - 1/4spoon மஞ்சள் தூள்                 - 1 சிட்டிகை உப்பு                                 - தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் கடுகு செய்முறை :                              முதலில் அத்தி காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு குக்கரில் முழு பாசிப்பருப்பு , அத்திகாய் மற்றும் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்க்கவேண்டும் . குக்கரில் மூடவும். இரண்டு அல்லது மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை  அனைக்கவும். சிறிது எண்ணெய் விட்டு , கடுகு போட்டு தாளித

கோவைக்காய் பொரியல்

கோவைக்காய் பொரியல் தேவையான பொருட்கள் : கோவைக்காய்        -  1cup வெங்காயம்              - 1 முட்டை                        - 2 மிளகு தூள்                 - 1 spoon மஞ்சள்தூள்               - 1/4spoon எண்ணெய் , உப்பு - தேவையான அளவு செய்முறை :                                            கோவைக்காய் , வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு , அதில் போட்டு நன்றாக வதக்கவும்.  பின்னர் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கடைசியில் முட்டையை ஊற்றவும். நன்றாக கிளறிவிடவும். குறைந்த அணலில் வைத்து , சிறிது நேரம் கழித்து அடுப்பை அனைக்கவும்.

Mushroom omelette

Mushroom omelette தேவையான பொருட்கள் : முட்டை                  -  2 Mushroom                   -  சிறிதளவு வெங்காயம்          - 1 பச்சை மிளகாய்  - 1 கொத்தமல்லி        - சிறிதளவு மஞ்சள்தூள்            - சிறிதளவு உப்பு                          - தேவையான அளவு செய்முறை:                          முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். பின்பு mushroom, வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி  அனைத்தையும் பொடியாக நறுக்கி முட்டையில் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூள் அதில் சேர்த்து நன்றாக கலக்கவும் . தோசைகல்லில் ஊற்றவும்.

வெஜிடபுள் போண்டா

Vegetable bonda  ( வெஜிடபுள் போண்டா ) எல்லா வகையான காய்கறிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிட,  இந்த போண்டா செய்து பாருங்க. தேவையான பொருட்கள்: கேரட் பீட்ரூட் முள்ளங்கி காலி ப்ளவர் உருளை கிழங்கு (உங்களுக்கு பிடித்த எல்லா காய்கறிகளும் ) ஒவ்வொரு காய்கறிகளும் - 1 cup அரிசி மாவு                          - 2 spoon கடலை மாவு                      - 2 spoon Corn flour                                    - 2  spoon கார மிளகாய் தூள்        - 1/2 spoon  உப்பு                                       -  தேவையான அளவு செய்முறை :  எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்( மிகவும் பொடியாக) . அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு,   Corn flour, கார மிளகாய் தூள் , உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும் . வாணலில் எண்ணெய் ஊற்றி , சூடேறிய பின்  உருண்டையாக  செய்து எண்ணெய்யில் பொரிக்கவும்.  சூடான காய்கறி போண்டா தயார் .

தக்காளி தொக்கு

தக்காளி தொக்கு  இந்த தக்காளி தொக்கு இட்லி , தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பம்  போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் : தக்காளி                 - 1/4 kg வெங்காயம்        - 3 பூண்டு                    - 5 பல்லு தேங்காய்              - 5 துண்டு மஞ்சள் தூள்        - 1/4 spoon மிளகாய் தூள்    - 1 1/2 spoon உப்பு                         - தேவையான அளவு  தாளிக்க: எண்ணெய்      -1 spoon கடுகு                    -1 spoon கறிவேப்பிலை கொத்தமல்லி செய்முறை:                              தக்காளி, வெங்காயம்  இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு , கடுகை போடவும் .  பின்பு தக்காளியை வதக்கிய பின் பூண்டு, வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.  பின்பு சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தண்ணீர்  சேர்க்கவும்.  கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றவும் . 5 நிமிடம் கழித்து கறிவேப்பிலை , கொத்தமல்லி போடவும் .

pepper உருளைக்கிழங்கு

Pepper உருளைக்கிழங்கு  உருளை கிழங்கு பொதுவாக அனைவரும் சமைப்போம். இந்த pepper உருளைக்கிழங்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இதில் சாதம் போட்டு mix பண்ணி (lunch) மதிய உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தேவையான பொருட்கள்:  உருளை கிழங்கு      - 3 மஞ்சள் தூள்                  - சிறிதளவு மிளகு                                  - 1 spoon தாளிக்க: எண்ணெய்   - 1 spoon கடுகு                 - சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லி செய்முறை :                                                            முதலில் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும் . பின்பு வாணலில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போடவும் . அதில் உருளைக்கிழங்கை போடவும். சிறிது மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கிழங்கு வெந்தவுடன் மிளகு பொடித்து அதில்  போடவும் . பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தூவலாம்.

மசாலா சுண்டல்

மசாலா சுண்டல் தேவையான பொருட்கள்:  வேகவைத்த சுண்டல்       - 2 cup (வெள்ளை பட்டாணி (அ) வெள்ளை கொண்டைகடலை) வெங்காயம்                              - 2 தக்காளி                                       - 2 சீரகம்                                             - 1 spoon துருவிய தேங்காய்               -  1  cup மஞ்சள் தூள்                              - 1/2 spoon உப்பு                                               - தேவையான அளவு கறிவேப்பிலை கொத்தமல்லி செய்முறை :                              வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றவும் . பின்பு கடுகு போடவும். தாளித்த பின் சீரகம் , வெங்காயம் , தக்காளி  போட்டு வதக்கவும் . வதக்கிய பின் கடலையை போடவும் .  தேவையான அளவு உப்பு , மஞ்சள்தூள் சேர்க்கவும். துருவிய தேங்காயை அரைத்து அதில் போடவும் . தண்ணீர் விடக்கூடாது. கறிவேப்பிலை , கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.

Mushroom பிரியாணி

Mushroom பிரியாணி தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி       - 2 cup  Mushroom                             - 2 cup வெங்காயம்                  - 1 cup தக்காளி                          - 1cup  பட்டை                             -  1 கிராம்பு                            -  2 ஏலக்காய்                       -  3 பிரிஞ்சி இலை            - 2 லவங்கம்                         - 2 இஞ்சி                                -1 துண்டு பூண்டு                             - 10 கொத்தமல்லி              - 1 cup புதினாக்கீரை             - 1 cup காரமிளகாய் தூள்   - 1/2 spoon தனியா தூள்                - 1/2 spoon கரம் மசாலா தூள்    - 1/2 spoon செய்முறை:                                                          அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும. குக்கரில் சிறிதளவு நெய் விட்டு மசாலாக்களை போடவும். பின்பு வெங்காயம் , தக்காளி , இஞ்சி, பூண்டு ,mushroom சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின் புதினாக்கீரை, கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.  அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றவும். காரமிளகாய் தூள், தனியா தூள்

மசாலா corn

மசாலா corn  பொதுவாக  corn வேகவைத்து  மட்டும் கொடுக்கும் போது  இருக்கும் சுவையை விட இந்த மசாலா corn  இன்னும் சுவையாக இருக்கும் . தேவையான பொருட்கள் :    Sweet corn                       - 1 cup  கரம் மசாலா.           - 1 spoon வெங்காயத்தாள்   - 1/4 cup  கொத்தமல்லி          - 1/4 cup  தேவையான எண்ணெய், உப்பு செய்முறை :                       முதலில் corn ஐ வேக வைக்கவேண்டும் . பின்பு தண்ணீரை வடிகட்டி வைக்கவும். வாணலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி , corn, கரம்  மசாலா, வெங்காயத்தாள் , கொத்தமல்லி , தேவையான உப்பு சேர்க்கவும்.

மசாலா இட்லி

மசாலா இட்லி  தேவையான பொருட்கள் :  இட்லி                            - 4 வெங்காயம்             - 1 தக்காளி                      - 1 பச்சை பட்டாணி  - 1/4 cup Capsicum                           - 1 (சிறிது) கொத்தமல்லி          - சிறிது உப்பு, மஞ்சள் தூள் , கார மிளகாய் தூள் - தேவையான அளவு செய்முறை :                              இட்லியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வாணலில் சிறிது எண்ணெய் விட்டு , வெங்காயம் , தக்காளி , பச்சை பட்டாணி மூன்றையும் நன்றாக வதக்கவும். பின்பு குடை மிளகாயை அதில் போட்டு வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் , கார மிளகாய் தூள் சேர்க்கவும். கடைசியாக நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து கிளறவும். கொத்தமல்லி பொடியாக நறுக்கி தூவலாம் .

கேரட் சட்னி

​ கேரட் சட்னி தேவையான பொருட்கள் : கேரட்                            - 2 வெங்காயம்              - 1 தக்காளி                      - 1 காய்ந்த மிளகாய்   - 2 தேங்காய்                    - சிறிதளவு தாளிக்க: எண்ணெய் கடுகு கறிவேப்பிலை செய்முறை :                           வாணலில் எண்ணெய் விட்டு , கேரட், வெங்காயம் , தக்காளி , தேங்காய் , காய்ந்த மிளகாய் அனைத்தையும் அதில் போட்டு நன்றாக வதக்கவும்.  ஆறவைத்து அரைக்கவும். வாணலில் எண்ணெய் விட்டு , கடுகு ,  கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் போடவும்.

நூடுல்ஸ் தோசை

Noodels  தோசை: தேவையான பொருட்கள் : தோசை மாவு நூடுல்ஸ் வெங்காயம்                   -1 (பெரியது) தக்காளி                            -1 (பெரியது) கார மிளகாய் தூள்   - 1 spoon உப்பு                                   - தேவையான அளவு எண்ணெய்                    - 4 spoon செய்முறை :                             ஒரு வாணலில்  எண்ணெய் விட்டு , வெங்காயம், தக்காளி இரண்டையும் நன்றாக வதக்கவும் . பின்பு நூடுல்ஸ் சேர்த்து, தண்ணீர் ஊற்றவும். சிறிது உப்பு, கார மிளகாய் தூள்  சேரத்து நன்றாக கிளறவும் . சிறிது நேரம் கழித்து gas off செய்யவும்.                           தோசை கல்லில் தோசையை ஊற்றவும். அதன் மீது இந்த நூடுல்ஸ் கிரேவியை  தடவவும்.