Skip to main content

ஜவ்வரிசி பயத்தம் பருப்பு பாயாசம்

ஜவ்வரிசி பயத்தம் பருப்பு பாயாசம்

                       ஒரு நாள் பக்கத்து வீட்ல வரலட்சுமி பூஜைக்கு கூப்பிட்டாங்க. என்னோட தோழிகளும், குழந்தைகளும் எல்லாரும் போயிட்டுவந்தோம். பூஜை முடிஞ்சதும்,  வடை, பாயாசம் , கேசரி எல்லாம் குடுத்தாங்க.  குழந்தைகளும் பிடிச்சதை சாப்பிட்டாங்க. நான் பாயாசம் சாப்பிட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சி.  என்ன பாயாசம்னு பாத்தா , ஜவ்வரிசி பயத்தம் பருப்பு பாயாசம் . பயத்தம் பருப்பு எப்பவுமே எனர்ஜிட்டிக்கான ஒரு பொருள் தான் . பயத்தம் பருப்புல ரசம் பண்ணாகூட ரொம்ப நல்லா இருக்கும், சுவையாவும் இருக்கும் .  நீங்களும் இந்த பாயாசத்தை செய்து பாருங்க .

தேவையான பொருட்கள் :

ஐவ்வரிசி                                    - 1 cup
பயத்தம் பருப்பு                      - 1 cup
வெல்லம் (அ)  சர்க்கரை     - 1 cup
பால்                                              -1 cup
முந்திரி                                        -  1 table spoon
திராட்சை                                   - 1  table spoon
ஏலக்காய் தூள்                        - சிறிது
நெய்                                              - தேவையான அளவு

செய்முறை:

பயத்தம் பருப்பையும், ஜவ்வரிசியையும் தனிதனியாக வேகவைக்கவும் . வேகவைத்தவுடன் இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும் . பின்னர் , பால் , சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் அதில் சேர்க்கவும் . வாணலில் நெய் விட்டு முந்திரி, திராட்சை , ஏலக்காய் போன்றவற்றை வறுத்து அதில் சேர்க்கவும் . சூடான பாயாசம் தயார் . நீங்களும் செய்து பாருங்க.

Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு இந்த குழம்பு  உடம்புக்கு மிகவும் நல்லது. சில பேர் குழம்பில் இருக்கிற கறிவேப்பிலையை சாப்பிடமாட்டாங்க . இந்த மாதிரி சமைக்கும் போது கண்டிப்பாக சாப்பிடுவாங்க. இதை மருந்து குழம்புனு கூட சொல்லலாம். வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா செய்து சாப்பிடலாம் . தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம்       - 10 தக்காளி                              - 1 பூண்டு                                 - 10 புளி                                        - 1எலுமிச்சை size மிளகாய் தூள்                  - தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்        - தேவையான அளவு தாளிக்க தேவையான அளவு எண்ணெய் வடகம் கறிவேப்பிலை அரைக்க கறிவேப்பிலை           - ஒரு கைப்பிடி அளவு மிளகு                              - 1 teaspoon சீரகம்                              - 1teaspoon எள்ளு                              - சிறிது வெந்தயம்                     - சிறிது கடலை பருப்பு            - 1 teaspoon தனியா தூள்                 - 1 tablespoon செய்முறை : அரைக்க தேவையானவற்றை மிதமான சூட்டில் வறுத்து , ஆற வைத்து அரைத்து கொள்

வேப்பம்பூ குழம்பு

வேப்பம்பூ குழம்பு                                     இந்த வகையான குழம்பு மருத்துவகுணம் கொண்டது. வயிறுல பூச்சி  இருந்தா கூட இந்த குழம்பு செய்து சாப்பிடலாம் . கசப்பு தன்மை இருக்கிறதால யாரும் சமைக்கமாட்டங்க. உடம்புக்கு ரொம்பவும் நல்லது. தேவையான பொருட்கள் : வேப்பம்பூ                         - 3  tablespoon கடலைப்பருப்பு             - 1  tablespoon உளுத்தம்பருப்பு          - 1  tablespoon பச்சரிசி                             - 1  tablespoon எள்ளு                                  - 1 tablespoon புளி                                       - 1 எலுமிச்சை அளவு மிளகாய் பொடி             - 3 tablespoon (குழம்பு மிளகாய் பொடி) வெங்காயம்                    -  1 தக்காளி                             - 1 பூண்டு                                - 10 பல்லு தாளிக்க எண்ணெய் , கறிவேப்பிலை தேவையான அளவு வடகம் 1 tablespoon செய்முறை: முதலில் வேப்பம்பூ , கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு , எள்ளு போன்றவற்றை நன்றாக வறுத்து பொடி பண்ணவும் . பின்னர் வாணலில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் , தக்காள

பாகற்காய் வறுவல்

பாகற்காய் வறுவல் தேவையான பொருட்கள் : பாகற்காய்                -  3 மிளகாய் தூள்         -  1 ½ spoon கடலைமாவு             - 1/4 spoon அரிசி மாவு                - 1/4 spoon மஞ்சள் தூள்             -  சிறிது எண்ணெய்               -  தேவையான அளவு உப்பு                             -  தேவையான அளவு செய்முறை :                              பாகற்காயை வட்ட வடிவில்( round shape) நறுக்க வேண்டும் . ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.  தண்ணீரை வடிகட்டவும். பின்னர் மிளகாய் தூள் , கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை போடவும் . தோசைகல்லில் வார்க்கவும் .