முள்ளங்கி முட்டை பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1/4 kg
முட்டை - 2
வெங்காயம் - 1 பெரியது
பச்சைமிளகாய் - 2
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முள்ளங்கியை துருவி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம் , பச்சை மிளகாய் இரண்டையும் வதக்கவும். பின்னர் துருவிய முள்ளங்கியை அதில் போட்டு வதக்கவும். முள்ளங்கி வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கிளறவும். உப்பு சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லியை தூவவும்.
Comments
Post a Comment