சௌ சௌ சட்னி
காய்கறிகள் சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம் .
தேவையான பொருட்கள்
சௌ சௌ - 1/4 kg
வெங்காயம் - 1
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம்பருப்பு - 2 spoon
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை
ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம் , தக்காளி , சௌ சௌ, உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய் போன்றவற்றை நன்றாக வதக்கவும் . ஆற வைத்து மிக்சியில், உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும் .
Comments
Post a Comment